நாடக நடிகர்- மகன் மீது தாக்குதல்

நாடக நடிகர்- மகன் மீது தாக்குதல் நடந்தது.

Update: 2023-07-04 19:30 GMT

மயிலாடுதுறை பசுபதி தெருவை சேர்ந்தவர் கிங்பைசல் (வயது41). நாடக நடிகரான இவர், நாட்டுப்புற கலைஞர் சங்க மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இவர் வசிக்கும் வீட்டின் கீழ் வீட்டில் வசிப்பவர் குணசேகரன். இவர்கள் இருவர் குடும்பத்தினருக்கும் இடையே மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டின் வாசலில் கிங்பைசலும், அவருடைய மகனும் (16 வயது சிறுவன்) சிலம்பம் விளையாடி உள்ளனர். அப்போது அங்கு வந்த குணசேகரனுக்கும், கிங்பைசலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து குணசேகரன் செல்போன் மூலம் தனது நண்பர்களை அழைத்துள்ளார். அவர்கள் வந்தவுடன், குணசேகரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிங்பைசலையும் அவரது மகனையும் கையாலும், உருட்டு கட்டையாலும் அடித்து தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த கிங்பைசலும், அவரது மகனும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை போலீசார் குணசேகரன், முரளி, செல்வகுமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்