அதிக விலைக்கு உரம் விற்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

அதிக விலைக்கு உரம் விற்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்பென்னாத்தூரில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2022-09-07 18:35 GMT

கீழ்பென்னாத்தூர்

அதிக விலைக்கு உரம் விற்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்பென்னாத்தூரில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்வு கூட்டம்

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (தேர்தல் பிரிவு) கே.குமரன் தலைமை தாங்கி நடத்தினார்.

வட்டார வேளாண் உதவி இயக்குனர் கே.சந்திரன், தாசில்தார் சக்கரை, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அமுல்பிரகாஷ் சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் துணை அலுவலர் சுப்பிரமணி வரவேற்றார்.

கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் வயலூர் சதாசிவம், முத்தகரம் பழனிசாமி, அட்மா ஆலோசனை குழு தலைவர் சோமாசிபாடிசிவகுமார், நீலந்தாங்கல் பாரதியார், சின்னஓலைப்பாடி கோவிந்தசாமி, சிறுநாத்தூர் தணிகாசலம், கணியாம்பூண்டி வரதராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டு பேசினர்.

அவர்கள் கூறுகையில், ''கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி பொதுமக்கள் தாலுகா அலுவலகத்துக்கு வருவதற்கு பாதை தெரியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரும்பு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்தல், கரும்பு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குதல், உரங்கள் தட்டுப்பாட்டை நீக்குதல் ஆகியவற்றுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மானியம் இல்லாத உரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக விலைக்கு உரத்தை விற்கும் கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்களில் போதிய அளவு உரங்கள் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மரக்கன்றுகளை பாதுகாக்க முள்வேலி அமைக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகள்

விவசாயிகளுக்கு காலதாமதம் இல்லாமல் இடுபொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி சாலைகள் மற்றும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இவற்றுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் அளித்து பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்