வேலூர் கோட்டையில் அத்துமீறும் காதல் ஜோடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

வேலூர் கோட்டையில் அத்துமீறும் காதல் ஜோடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனந பா.ம.க.மகளிர் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-11-18 12:01 GMT

வேலூர் கோட்டையில் அத்துமீறும் காதல் ஜோடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனந பா.ம.க.மகளிர் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பா.ம.க.வின் வேலூர் மாவட்ட மகளிர் சங்கம், இளம்பெண்கள் சங்கம் மற்றும் அன்புமணி தங்கைகள் படையின் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் வேலூரில் நடந்தது. மாவட்ட பொருளாளர் மஞ்சுளா தலைமை தாங்கினார். மகளிர் சங்க தலைவர் சுகன்யா வரவேற்றார்.

கவுன்சிலர் பாபிகதிரவன், நித்தியா உள்பட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மகளிர் சங்க மாநில செயலாளர் சக்தி கமலம்மாள், தலைவர் நிர்மலாராஜா, செயலாளர் வரலட்சுமி மற்றும் மாவட்ட செயலாளர் கே.எல்.இளவழகன், மாவட்ட தலைவர் பி.கே.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

முடிவில் மாவட்ட துணைத்தலைவர் ஆர்.பி.சம்பத் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை இளைஞரணி செயலாளர் ப.ஜெகன் மற்றும் நிர்வாகிகள் சரவணன், சசிகுமார், தேவா உள்பட பலர் செய்திருந்தனர்.

கூட்டத்தில், டாக்டர் ராமதாஸ் ஆணைக்கிணங்க மாவட்டந்தோறும் மகளிர் மாநாடு நடத்துவது, அதில் 5 ஆயிரம் பெண்களை கலந்து கொள்ள செய்வது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அரசு அறிவிக்க வலியுறுத்துவது, வேலூர் கோட்டையில் காதல் ஜோடிகள் ஆங்காங்கே அமர்ந்து அத்துமீறும் செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை, நிர்வாகத்தை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்