ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி

ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி அளித்தார்.

Update: 2023-09-13 19:15 GMT

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு மாநிலங்களும் தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுப்பது இயல்பு. காவிரி நதிநீர் ஆனையத்தின் மூலம் தீர்வு காண முடியவில்லை என்றால் சுப்ரீம்கோர்ட்டை நாடவேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே நல்லது. தகுதி அடிப்படையில் உரிமைத்தொகை வழங்குவதை தளர்த்த வேண்டும்.

உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் மத்தியில் இது அதிருப்தியை ஏற்படுத்தும். சனாதன சர்ச்சையால் கூட்டணியில் எந்த பிரச்சினையும் வராது.

சனாதனம் என்பதற்கு வட இந்தியாவில் வேறு ஒரு புரிதல் உண்டு. அது அவர்களிடையே சச்சரவை ஏற்படுத்தும். காங்கிரஸ் கட்சி என்பது எம்மதமும் சம்மதம் என்கிற கோட்பாடுடன் உள்ள கட்சி. என்னை பொருத்தமட்டில் சாதிய ஏற்ற தாழ்வுகளை களைய முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை நடந்துள்ளது. அப்பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தால் அதன் மூலம் விசாரனை மேற்கொண்டிருக்கலாம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்