எளியமுறையில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கைநாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை

எளியமுறையில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Update: 2023-02-02 18:45 GMT

தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் காணை என்.சத்தியராஜ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாநில ஆலோசகர் விழுப்புரம் பழனி, இணை செயலாளர் கள்ளக்குறிச்சி கண்ணன், பொதுச்செயலாளர் கள்ளக்குறிச்சி தங்க.ஜெயராஜ், இணை பொதுச்செயலாளர் சேலம் நாகூர்கனி, கவுரவ தலைவர் நாமக்கல் வானதி கதிர், ஈரோடு செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்ட தலைவர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மதுரை சோமசுந்தரம், தஞ்சாவூர் வீரசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், செஞ்சி ஆலம்பூண்டியில் வருகிற மார்ச் மாதம் 4-ந் தேதி மாநில மாநாடு நடத்துவது, இம்மாநாட்டில் பல்வேறு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நாட்டுப்புற கலைஞர்கள் என 6 ஆயிரம் பேரை கலந்துகொள்ள செய்வது, அரசு விழாக்களில் கட்டாயம் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி நடத்த அனுமதி தர வேண்டும், அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கும் ஓய்வூதியத்தை எளிய முறையில் பெறுவதற்கு ஆவண செய்ய வேண்டும், 58 வயது முடிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில செயலாளர் கிருஷ்ணகிரி குப்புசாமி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெருமாள், நிர்வாகிகள் வேலூர் சந்தோஷ், திருச்சி ரங்கநாதன், கள்ளக்குறிச்சி பாலு, திருவள்ளூர் வெங்கடேசன், திண்டுக்கல் ஜெயப்பிரகாஷ், கடலூர் வெங்கடேசன், முருகவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மாயவன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்