தொழில் வரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை
நெல்லை மாநகராட்சிக்கு தொழில் வரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாநகர பகுதியில் அமைந்துள்ள கடைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், தனியார் பஸ் நிறுவனங்கள், அரசு போக்குவரத்து கழகங்கள், தியேட்டர் மற்றும் ஜவுளி கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயரில் நிலுவையாக இருக்கும் தொழில் வரியை உரிய காலத்தில் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் மாநகராட்சி சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்து உள்ளார்.