121 தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சுதந்திரதினத்தன்று விடுமுறை அளிக்காத 121 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Update: 2023-08-15 21:05 GMT

தஞ்சாவூர்;

சுதந்திரதினத்தன்று விடுமுறை அளிக்காத 121 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சுதந்திர தின விடுமுறை

தஞ்சை மாவட்டத்தில் தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுகிறதா? என சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன், இணை ஆணையர் திவ்யநாதன் ஆகியோர் அறிவுரைப்படி தஞ்சை தொழிலாளர் உதவி ஆணையர் (சட்ட அமலாக்கம்) கமலா தலைமையில் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தனியார் நிறுவனங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.தஞ்சை, கும்பகோணம், பாபநசாம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அல்லது இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா? என ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.

121 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

133 நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொண்ட போது 69 நிறுவனங்களில் முரண்பாடுகளும், 43 உணவு நிறுவனங்களில் முரண்பாடுகளும், 9 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களிலும் என மொத்தம் 121 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தொழிலாளர் உதவி ஆணையர் கமலா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்