வீட்டை விட்டு துரத்திய நபர்கள் மீது நடவடிக்கை

திட்டக்குடி அருகே வீட்டை விட்டு துரத்திய நபர்கள் மீது நடவடிக்கை கலெக்டரிடம் பெண் மனு

Update: 2023-04-24 18:45 GMT

கடலூர்

திட்டக்குடி அருகே மேல் ஆதனூர் கிராமத்தை சேர்ந்த சித்ரா (வயது 38) என்பவர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து அளித்த மனுவில், எனது தந்தைக்கு சொந்தமான நிலத்தை உறவினர்கள் 2 பேர் அபகரித்துக்கொண்டு என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டனர். என்னுடைய வீட்டில் இருந்த பொருட்களை வெளியே வீசி எறிந்து விட்டனர். இதனால் வீடு இன்றி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறேன். ஆகவே எனது தந்தைக்கு சொந்தமான சொத்துகளை மீட்டுத்தர வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமையும் சந்தித்து மனு அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்