குழந்தை திருமணம் நடந்தால் மண்டப உரிமையாளர் மீது நடவடிக்கை
குழந்தை திருமணம் நடந்தால் மண்டப உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில், குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து திருமண மண்டப உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமை தாங்கி பேசினார். அப்போது பெண்ணிற்கு 18 வயது பூர்த்தி அடைந்துள்ளதா என்பதை பார்க்க வேண்டும். மேலும் மண்டப உரிமையாளர்கள் பெண்ணின் வயதை உறுதி செய்ய கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை சரிபார்க்க வேண்டும். அவ்வாறு சரிபார்க்காமல் குழந்தை திருமணம் ஏதாவது நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மண்டப உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.