மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு தர்மபுரி கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.

Update: 2022-09-12 16:33 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு தர்மபுரி கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.

குறைதீர்க்கும் கூட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 360 மனுக்கள் கொடுத்தனர்.

இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் சாந்தி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, கலால் உதவி ஆணையர் தணிகாசலம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உதவித்தொகை

கூட்டத்தில் கொரோனா தொற்றால் தாய், தந்தை இருவரையும் இழந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 9 குழந்தைகளுக்கு மொத்தம் ரூ.2.70 லட்சம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். உங்களின் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கி கொள்வதற்கு கல்வி ஒன்றே சிறந்தது என்பதை உணர்ந்து நன்கு படித்து, நல்ல மதிப்பெண்கள் பெற்று, உயர்ந்த இடத்தை அடைந்திட சிறப்பான கல்வியை கற்க வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்