தடையை மீறி செயல்பட்ட இறைச்சி கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
ரூ.5 ஆயிரம் அபராதம்
காந்தி ஜெயந்தியையொட்டி இறைச்சி கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. தடையை மீறி இறைச்சிக்கடைகள் செயல்படுகிறதா? என்று மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார்கள். 21-வது வார்டுக்கு உள்பட்ட பிரசாந்த் வீதியில் உள்ள ஒரு கோழிக்கடையின் பின்பக்கமாக இறைச்சி வியாபாரம் செய்யப்பட்டது அதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தடையை மீறி இறைச்சி விற்பனை செய்ததாக கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடையில் இருந்து 5 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.