மனுக்களுக்கு ஒப்புகை ரசீது வழங்க வேண்டும்

மனுக்களுக்கு ஒப்புகை ரசீது வழங்க வேண்டும்

Update: 2022-12-01 20:16 GMT

மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு ஒப்புகை ரசீது வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கும்பகோணம்

கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை தாங்கினார். கும்பகோணம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமரூல்ஜமான், கலால் மேலாளர் ராஜ்கண்ணு, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சுவாமிநாதன், வட்ட வழங்கல் அலுவலர் மதுசூதனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திருவிடைமருதூர் தாசில்தார் அலுவலக மாடியில் உள்ள அலுவலகத்தை தரை தளத்தில் இயங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

இடமாற்றம் செய்ய வேண்டும்

இந்த கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் அவசியம் கலந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். அனைத்து அரசு துறை அலுவலகங்கள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சாய்வுதள பாதைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கும்பகோணத்தில் உள்ள இ.சேவை மையத்தை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி இடமாற்றம் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு ஒப்புகை ரசீது வழங்க வேண்டும்.

தீர்வு காணப்படும்

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை மனுக்கள் ஏற்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும், கும்பகோணம் கோட்டத்தில் 450 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை கிடைக்கவில்லை. நிலுவையிலுள்ள 6 மாதங்களுக்கு சேர்த்து உதவித்தொகை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி் மாற்றுத்திறனாளிகள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் அந்தந்த துறைக்கு அனுப்பி வைத்து உடன் தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்