சாதனை படைத்த மாற்றுத்திறனாளி குழந்தைகள்:கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு

மாநில பாரா ஒலிம்பிக் போட்டியில் சாதனை படைத்த தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டினார்.

Update: 2023-01-23 18:45 GMT

மாநில பாரா ஒலிம்பிக் போட்டியில் சாதனை படைத்த தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டினார்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி மனுக்கள் வாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 380 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

வாழ்த்து

மேலும் மாநில அளவில் நடந்த பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம், சான்றிதழ் மற்றும் கேடயங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். அப்போது, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஜேன் கிறிஸ்டி பாய் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்