தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி பள்ளி மாணவன் சாதனை
தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி அரூர் பள்ளி மாணவன் சாதனை படைத்தான்.
அரூர்:
சுதந்திர தினத்தையொட்டி சிலம்பம் சுற்றும் உலக சாதனை-2022 என்ற நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. இதில் அரூர் சின்னாங்குப்பம் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 4-ம் வகுப்பு மாணவன் ஹரேந்திரா கலந்து கொண்டு தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளான். இந்த மாணவனை பள்ளி தலைவர் முருகன், தாளாளர் மனோகரன், செயலாளர் மனோகரன், பொருளாளர் சுரேஷ் மற்றும் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.