சாலையோர தடுப்புகள் இல்லாததால் அதிகரிக்கும் விபத்துகள்

சாலையோர தடுப்புகள் இல்லாததால் அதிகரிக்கும் விபத்துகள்

Update: 2022-12-12 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு- கோதவாடி சாலையில் கோடங்கிபாளையம், நல்லட்டிபாளையம், செட்டியக்காபாளையம், நெகமம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு வளைவான பகுதியில் தரைமட்ட பாலம் உள்ளது. இதன் கீழ் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் கால்வாய் செல்கிறது. இந்த நிலையில் பாலம் உள்ள பகுதியில் சாலையோரத்தில் தடுப்புகள் எதுவும் இல்லை. மேலும் வேறு எந்த எச்சரிக்கை பலகையும் கிடையாது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, சாலைேயார தடுப்புகள் இல்லாததால், இரவில் வரும் வாகனங்கள் அந்த வளைவில் திரும்பும்போது சாலையை விட்டு கீழே இறங்கி விபத்தில் சிக்கி கொள்கின்றன. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையோர தடுப்புகள் அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்