சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து
கல்வராயன்மலையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்பட்டது.
கச்சிராயப்பாளையம்:
கல்வராயன்மலை மக்கள், வெள்ளிமலை- கள்ளக்குறிச்சி சாலையைத்தான் அதிகளவு பயன்படுத்துகிறார்கள். இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இப்படிப்பட்ட முக்கிய சாலையில் தினமும் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, பலர் காயமடைந்துள்ளனர். எனவே சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க வேண்டும், அதன் உரிமையாளர்கள் மாடுகளை கட்டிப்போட வேண்டும், மீறி மாடுகளை அவிழ்த்து சாலையில் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.