வேதிப்பொருள் தொழிற்சாலையில் விபத்து

வேதிப்பொருள் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டது.

Update: 2023-04-06 19:04 GMT


விருதுநகர் அருகே உள்ள சொக்கலிங்காபுரத்தில் பட்டாசு ஆலைகளுக்கு வேதிப்பொருள் வினியோகம் செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கம்பி மத்தாப்புகளுக்கு தேவையான வேதிப்பொருளை உருக்கி 5 கிலோ கட்டியாக பட்டாசு ஆலைகளுக்கு வினியோகம் செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று மாலை வேதிப்பொருளை பாய்லரில் உருக்கி 5 கிலோ கட்டியாக மாற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. ஆலை உரிமையாளர் சிவகாசியை சேர்ந்த ரவிசங்கர் (வயது 47) மற்றும் 9 பணியாளர்கள் இருந்தனர். வேதிப்பொருளை கட்டியாக்கும் போது ஆலை உரிமையாளர் ரவிசங்கர் மீது பட்டு அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக சிவகாசியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பணியாளர்கள் யாருக்கும் காயம் இல்லை. இதுபற்றி வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்