மொபட் மீது லாரி மோதி மெக்கானிக் சாவு

மொபட் மீது லாரி மோதி மெக்கானிக் இறந்தார்.

Update: 2023-06-10 21:23 GMT

கொண்டலாம்பட்டி:

சேலம் டவுன் பழைய பஸ் நிலையம் அருகே கணக்கர் தெரு குஞ்சு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 65). ஜெனரேட்டர் மெக்கானிக். இவர் வேம்படிதாளத்திற்கு மொபட்டில் சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது தேசிய நெடுஞ்சாலை உத்தமசோழபுரம் சூளைமேடு பஸ் நிறுத்த பகுதியில் வந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று மொபட்டின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சுந்தரம் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரியை தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்