மோட்டார் சைக்கிள் மீது மோதி தோட்டத்துக்குள் பாய்ந்த பஸ்; ஊராட்சி செயலர் பலி

வீரபாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பஸ் தோட்டத்துக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் ஊராட்சி செயலர் பலியானார்.

Update: 2023-05-26 21:00 GMT

வீரபாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பஸ் தோட்டத்துக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் ஊராட்சி செயலர் பலியானார்.

அரசு பஸ் மோதியது

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள சின்னஓவுலாபுரத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 51). இவர், அய்யம்பட்டி ஊராட்சி செயலராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் காளியப்பன் நேற்று இரவு தேனியில் இருந்து சின்னஓவுலாபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வீரபாண்டி அருகே தேனி-கம்பம் சாலையில் கோட்டூர் எஸ்.பி.எஸ். காலனி பகுதியில் அவர் வந்தபோது, எதிரே வந்த அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் அந்த பஸ் சாலையோரம் இருந்த வாழை தோட்டத்துக்குள் பாய்ந்து நின்றது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த காளியப்பன் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பஸ்சில் வந்த பயணிகள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது.

மீட்பு பணி

இதுகுறித்து தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேபோல் பலியான காளியப்பனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்