நாய் குறுக்கே ஓடியதால் பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ்
நாய் குறுக்கே ஓடியதால் பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ்
கடத்தூர்
பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவுக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் பண்ணாரியில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சுப்பிரமணி என்பவர் ஓட்டினார். கண்டக்டராக லிங்கேஸ்வரன் இருந்தார். பஸ்சில் 90 பணிகள் இருந்தனர். கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையம் புற்றுக்கண் கோவில் அருகே பஸ் வந்தபோது நாய் ஒன்று குறுக்கே ஓடியது. இதனால் அவர் பஸ்சை ஓரமாக ஒதுக்கினார். இதில் பஸ் ரோட்டோரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. நல்ல வேளையாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.