விபத்தில் தாய், மகள் படுகாயம்

Update: 2023-03-14 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 40). இவருடைய தாய் லட்சுமி (60). நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் மொபட்டில் பாப்பிரெட்டிப்பட்டிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். வழியில் வெங்கடசமுத்திரம் 4 ரோடு அருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது.

இந்த விபத்தில் ராஜேஸ்வரி, லட்சுமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்த புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்