ஓசூர்:
ஓசூர் அருகே காரப்பள்ளி பிள்ளையார் நகரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 37). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 7-ந் தேதி இரவு ஓசூர்- பெங்களூரு சாலையில் ஜூஜூவாடி அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி தேவராஜ் மீது வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.