கல்லூரி வேன்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து: மாணவிகள் உள்பட 5 பேர் காயம்
கல்லூரி வேன்-கார் நேருக்கு நேர் மோதிய விபத்த்தில் மாணவிகள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
மேட்டூர்:
தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி வேன் மேட்டூருக்கு வந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு தர்மபுரி நோக்கி சென்று கொண்டு இருந்தது. இதே போல அதியமான் கோட்டையில் இருந்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் நோக்கி ஒரு கார் சென்றது. மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக கல்லூரி வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் கல்லூரி பஸ்சில் வந்த மாணவிகள் ஜோதி (வயது 22), திவ்யா (23), பஸ் டிரைவர் ராபர்பிரவீன் (30) மற்றும் காரில் வந்த அந்தியூரை சேர்ந்த சண்முகம் (46), திவ்யபிரியா(26) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.