சிவகாசி, விபத்தில் முதியவர் பலியானார்.
சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் கீழூரை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 75). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசி-வெம்பக்கோட்டை ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் ஜெயராமன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஜெயராமனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், முதியவர் ஜெயராமன் வரும்வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து ஜெயராமன் மகன் பொன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.