ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதி, தூக்கி வீசப்பட்ட 15 வயது சிறுவன்

ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதி, தூக்கி வீசப்பட்ட 15 வயது சிறுவன் காயம் அடைந்தான்.

Update: 2022-12-15 18:45 GMT

தேவகோட்டை, 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஒரு ஊரை சேர்ந்த 15 வயது சிறுவன் நேற்று, மோட்டார்சைக்கிளில் தனது உறவினர் மகளான 4 வயது சிறுமியை அழைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தான். தேவகோட்டை அடுத்த விருசுழி ஆற்று பாலத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக பாலத்தின் தடுப்பு சுவரில் வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுமியும், சிறுவனும் பாலத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக ஜீப்பில் வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் உடனடியாக தனது ஜீப்பில் காயம் அடைந்த சிறுமியையும், சிறுவனையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்