கடத்தூர் அருகே டிராக்டர் மோதி தம்பதி உள்பட 3 பேர் காயம்

Update: 2022-12-14 18:45 GMT

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள வேப்பிலைப்பட்டியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ். இவருடைய மனைவி சக்தி. இந்தநிலையில் உறவினரின் திருமணத்துக்கு பத்திரிகை அடிப்பதற்காக, சவுந்தர்ராஜ், சக்தி மற்றும் இவருகளுடைய பேரன் சாய் அமுதன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் புட்டிரெட்டிப்பட்டியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரெயில்வே கேட் பெருமாள் கோவில் அருகே பின்னால் வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்து சவுந்தர்ராஜ், சக்தி, சாய் அமுதன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்