மோட்டார்சைக்கிள்கள் மோதல்; 2 பேர் படுகாயம்

மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-12-02 18:45 GMT

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி அருகே கிருங்காகோட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). இவர் நேற்று முன்தினம் இரவு சிங்கம்புணரியில் இருந்து கிருங்காகோட்டைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். உப்பாற்று பாலம் வழியாக சென்றபோது மூவன்பட்டியில் வசிக்கும் குமார் (45) என்பவரின் மோட்டார்சைக்கிளும், கார்த்திகேயனின் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார்த்திகேயன், குமார் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்