தலைவாசல் அருகே கார் மீது மோதிய லாரி தாறுமாறாக ஓடியது-வீட்டின் சுற்றுச்சுவரில் மோதி நின்றது

தலைவாசல் அருகே கார் மீது மோதிய லாரி தாறுமாறாக ஓடியது. அந்த லாரி வீட்டின் சுற்றுச்சுவரில் மோதி நின்றது.

Update: 2022-10-30 21:01 GMT

தலைவாசல்:

சென்னையில் இருந்து சேலம் நோக்கி ஒரு லாரி சென்றது. இந்த லாரியை திருவண்ணாமலையை சேர்ந்த பரூக் (வயது 39) என்பவர் ஓட்டி வந்தார். தலைவாசல் அடுத்த நத்தக்கரை பிரிவு ரோட்டில் லாரி சென்ற போது, அந்த வழியே ஊட்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கார் கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த 3 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். அதே நேரத்தில் விபத்தை ஏற்படுத்திய லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நடுவில் உள்ள தடுப்பை (சென்டர் மீடியன்) உடைத்து கொண்டு சாலையின் மறுபக்கத்திற்கு தாறுமாறாக ஓடியது. மறுபக்கத்தில் சாலை ஓரத்தில் உள்ள சேகோ ஆலைக்குள் நுழைந்து அங்கிருந்த வீட்டின் சுற்றுச்சுவரை இடித்துக்கொண்டு லாரி நின்றது. இதில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. லாரி டிரைவரான பருக், மற்றொரு டிரைவரான கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை சேர்ந்த துரைக்கண்ணன் ஆகியோரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். மக்கள் நடமாட்டம் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்