சாயல்குடி,
சாயல்குடி அருகே தத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் முத்துசாமி மகன் வெற்றிவீரன் (வயது27). மலைமேகு மகன் இளையராஜா (20), இஸ்மாயில் மகன் முகமது ராஜா (18) ஆகிய 3 பேரும் வாலிநோக்கம் விலக்கு ரோட்டில் இனிப்பு வாங்கிக்கொண்டு வரும்போது சிக்கல் கிராமத்தில் இருந்து வாலிநோக்கம் நோக்கி வந்த கார்மோதியதில் வெற்றிவீரன், இளையராஜா, முகமது ராஜா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காரில் வந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ், சிக்கல் இன்ஸ்பெக்டர் முருகதாசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.