சீலநாயக்கன்பட்டியில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி-கணவர் படுகாயம்

சீலநாயக்கன்பட்டியில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார். கணவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-10-10 22:43 GMT

அன்னதானப்பட்டி:

‌சேலம் அமானி கொண்டலாம்பட்டி அரசமரத்துக்காட்டூரில் உள்ள அழகு நகர் நடுவீதி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48), ெடய்லா். இவருடைய மனைவி அம்சவள்ளி (43). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தனியார் மருத்துவமனை பகுதியில் இருந்து சாலையை கடந்து செல்ல முயன்றனர். அப்போது கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர்கள் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கணவன்,மனைவி இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அம்சவள்ளி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ராஜேந்திரனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்