திருப்புவனம்,
பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது ஏ.ஆர். உசிலம்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 19). தொழிலாளி. இவர் நேற்று அரசனூர் சமத்துவபுரம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பூவந்தியிலிருந்து சிவகங்கை நோக்கி சென்ற தனியார் பள்ளி பஸ் மோதியதில் ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.