அரசு பஸ் டயர் வெடித்து 14 பேர் படுகாயம்
அரசு பஸ் டயர் வெடித்து 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்புவனம்,
ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை டி.கரிசல்பட்டியை சேர்ந்த வைரமணி (வயது37) என்பவர் ஓட்டி வந்துள்ளார். சம்பராயனேந்தல் அருகே வரும்போது பஸ்சின் டயர் திடீரென வெடித்துள்ளது. இதில்நிலை தடுமாறிய பஸ் அருகே வயலில் புகுந்து நின்றது. இதில் பஸ்சில் பயணம் செய்த பரமக்குடியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், பார்த்திபனூர் மலைராஜ், மானாமதுரை தாலுகா குருந்தங்குளத்தை சேர்ந்த விஷ்ணுவரதன் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாச்சேத்தி போலீசார் பஸ் டிரைவர் வைரமணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.