லாரி - கார் நேருக்குநேர் மோதல்; பெண் பலி
லாரி - கார் நேருக்குநேர் மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
போகலூர்,
மதுரையில் இருந்து ஏர்வாடி தர்காவிற்கு மதுரையை சேர்ந்த அசன் பானு (வயது35), நசீமா (28), அப்பாஸ் (32) ஆகிய 3 பேரும் காரில் வந்துவிட்டு மதுரைக்கு திரும்பி சென்றனர். அப்பாஸ் என்பவர் காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது மாவிலங்கை அருகே வரும்போதும் அந்த வழியாக வந்த லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காருக்குள் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். படுகாயம் அடைந்த அசன் பானு காருக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த டிரைவர் அப்பாஸ், நசீமா 2 பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.