பர்கூர் அருகேலாரி கவிழ்ந்து விபத்து

Update: 2023-09-11 19:30 GMT

பர்கூர்:

சென்னையில் இருந்து பழைய இரும்பு துண்டுகளை ஏற்றிக்கொண்டு ஓசூருக்கு லாரி ஒன்று வந்தது. லாரியை தர்மபுரியை சேர்ந்த டிரைவர் பெரியசாமி (வயது 40) ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் பர்கூர் அருகே உள்ள எமக்கல் நத்தம் மேம்பாலம் அருகே லாரி வந்தபோது முன்பக்க ஆக்சில் திடீரென துண்டானது. இதனால் லாரி சாலையோரம் இருந்த இணைப்பு சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் அந்த வழியாக விபத்து நடந்த நேரத்தில் யாரும் வராததால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்