பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 35), கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று வீட்டில் இருந்து பாலக்கோடு நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். பாலக்கோடு ஸ்தூபி மைதானம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டர், இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை, உடனடியாக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.