திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-08-12 10:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், செயலர் ச.ஜெயக்குமார், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அணி எண்கள்.43 மற்றும் 45 சார்பாக போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி செயலர் வாழ்த்தி பேசினார். திருச்செந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆவுடையப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் துணை தாசில்தார் சங்கர நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் அபுல்கலாம் ஆசாத் மற்றும் மருதையாபாண்டியன் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்