உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு

உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு

Update: 2023-06-05 18:45 GMT

தில்லைவிளாகம்:

முத்துப்பேட்டையை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்தை வனத்துறை பராமரித்து வருகின்றது. நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட வனத்துறையும், தேசிய பசுமை படை அதிரை சுற்றுச்சூழல் மன்றமும் இணைந்து நமது வாழ்க்கை முறையை மாற்றும் என்ற தலைப்பில் நெகிழியை தவிர்ப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட வன சரக அலுவலர் சைதானி தலைமை தாங்கினார். இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர் சிவசுப்பிரமணியன் மற்றும் அதிராம்பட்டினம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு நெகிழியை தவிர்ப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் பறவைகள் சரணாலயம் சுற்றுப்புறத்தில் கிடந்த நெகிழியை மாணவர்கள் அகற்றி மரக்கன்றுகள் நட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்