கரூரில் ஏ.சி. எந்திரத்தில் புகுந்த பாம்பு
கரூரில் ஏ.சி. எந்திரத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்-கோவை சாலையில் ஒரு தனியார் யோகா மையம் உள்ளது. இந்த யோகா மையத்தில் உள்ள ஏ.சி. எந்திரத்தில் இருந்து நேற்று வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. மேலும் ஏ.சி. எந்திரத்தில் பாம்பு இருப்பதாக அங்கிருந்தவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து யோகா மையத்தை சேர்ந்தவர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நிலைய அலுவலர் (போக்குவரத்து) சார்புதீன் தலைமையில் யோகா மையத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் ஏ.சி. எந்திரத்தை சோதனை செய்த போது, அதில் பாம்பு ஒன்று இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஏ.சி. எந்திரத்தில் இருந்த பாம்பினை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.