லோக்கல் ரெயில்களில் ஏசி பெட்டிகள் - டெண்டர் கோரிய சென்னை மெட்ரோ
சென்னையில் இயங்கும் புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை அறிமுகப்படுத்துவது, தானியங்கி கதவுகள் பொருத்துவது ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
சென்னை,
சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரி உள்ளது.
ஒருங்கிணைந்த நகர போக்குவரத்து திட்டத்தின்கீழ், சென்னைப் புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்க, சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்படும் சிறப்பு முயற்சிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி பெட்டிகளை இணைப்பது தொடர்பாக, ஆலோசகரை தேர்வு செய்ய டெண்டர் கோரியுள்ளது.
இதன்படி, சென்னையில் இயங்கும் புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை அறிமுகப்படுத்துவது, தானியங்கி கதவுகள் பொருத்துவது ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.