வீட்டில் ஏ.சி. எந்திரம் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு
தூத்துக்குடியில் வீட்டில் ஏ.சி. எந்திரம் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
தூத்துக்குடி சுப்பையாபுரம் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்த ஏ.சி. எந்திரத்தில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அதிகாரி சகாயராஜ் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.