நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

சேரன்மாதேவியில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-26 21:40 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி ஆலடிமணிநகரை சேர்ந்தவர் ஞானதுரை (வயது 60). இவரை சேரன்மாதேவி போலீசார் கடந்த 2013-ம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 2 மாதமாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனால் கோர்ட்டு அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. இந்த நிலையில் சேரன்மாதேவி போலீசார் ஞானதுரையை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்