சப்- இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு திடீர் மாற்றம்

சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-01-06 19:30 GMT

அன்னதானப்பட்டி:'-

சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் வீரன். நேற்று முன்தினம் இவர் திடீரென ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் சரியில்லை எனக்கூறி மருத்துவ சான்றிதழ் கொடுத்து விட்டு, அவர் விடுப்பில் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் விடுமுறை முடிந்து மீண்டும் அவர் பணிக்கு திரும்பினார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதை தொடர்ந்து அவர், ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இந்த விவகாரம் போலீசார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், அவர் எதற்காக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார் என்ற விவரம் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்