ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை அபேஸ்

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

Update: 2023-04-02 20:47 GMT

பேரையூர்

மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருடைய மனைவி மீனா (வயது 77). சம்பவத்தன்று மூதாட்டி மீனா டி.கல்லுப்பட்டியிலிருந்து பேரையூருக்கு தனியார் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். பேரையூர் முக்குசாலை என்ற இடத்தில் பஸ்சை விட்டு இறங்கும் போது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலி திருடு போயிருந்தது. யாேரா பஸ்சில் அவருடைய நகைைய திருடி இருக்கிறார்கள். இதுகுறித்து மீனா பேரையூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்