கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - இன்று பேச்சுவார்த்தை

ஆவின் பால் கொள்முதல் விலை, விற்பனை விலை உயர்வு குறித்து பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-20 02:30 GMT

சென்னை,

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும். பால் கூட்டுறவு சங்க பணியாளர்களை பணி வரன்முறைப்படுத்த வேண்டும். அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து கால்நடைகளுக்கும் இலவச காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பால் வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் குறித்து வருகிற 26-ந்தேதிக்குள் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் காத்திட வருகிற 28-ந்தேதி முதல் தொடர் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்காமல் போராட்டம் நடத்த உள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அக்டோபர் 28ம் தேதி முதல் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்காமல் போரட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்