வீரபாண்டி
திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில், ஆதார் சேவை மையம், அரசு இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இச்சேவை மையத்திற்கு ராக்கியாபாளையம், செவந்தாபாளையம், கணபதிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆதார் இ-சேவை பணிகள் சம்பந்தமாக தினமும் வந்து செல்கின்றனர். ஆனால் இ-சேவை மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் பல மணி நேரம் வெளியே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது (சர்வர்) நெட்வொர்க் பிரச்சினைகள் ஏற்படுவதால் நேர காலம் தாமதம் ஏற்படுவதோடு, பணிகள் முடிவடைய காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் அவதிப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் இ-சேவை மையத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
பொதுமக்களின் சிரமங்களை போக்கிடவே அரசு இ-சேவை மையம் தொடங்கி உள்ளதாகவும், எனவே இ-சேவை மையத்தை அதே பகுதியில் அமைத்து மக்களின் சேவையை தொடர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் பலரும் தெரிவித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
=======