அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-10 14:42 GMT

தொண்டி, 

திருவாடானை அரசு கல்லூரி முன்பு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களின் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கவுரவ விரிவுரையாளர் சங்கத் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன், பொருளாளர் இளைய ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப் பாட்டத்தில் கலந்துகொண்ட கவுரவ விரிவுரை யாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண் கவுரவ விரிவுரையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்