ஆடிப்பூர விழா: மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் தேரோட்டம்

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி இன்று தேரோட்டம் நடைபெற்றது.;

Update:2022-08-01 17:59 IST

மன்னார்குடி,

பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றான மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆடி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 24-ம் தேதி தெடாங்கி நடைபெற்றுவந்தது.

ஆடி மாதத்தில் செங்கமலத்தாயாருக்கு நடைபெறும் இந்த உற்சவத்தில் கடந்த 24-ந்தேதி தொடங்கி அன்னவாகனம், வெள்ளி சேஷவாகனம், யானை வாகனம், கமலவாகனம், குதிரை வாகனம் என தினமும் பல்வேறு வாகனங்களில் செங்கமலாதாயார் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

இதில் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் இன்று நடைபெற்றது. மதியம் தேரை மன்னார்குடி நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தார்.

இதில் நகரசபை துணைத்தலைவர் கைலாசம், மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர். தேரானது கோவிலில் உள்ளே உள்ள வெளிப்பிரகாரத்தில் செங்கமலத் தாயார் எழுந்தருளி கோவிலை வலம் வந்து மாலையில் நிலையை அடைந்தது.

தேர்திருவிழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். மன்னார்குடி துணை சூப்பிரண்டு பாலசந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேராட்டவிழாவில் மன்னார்குடி மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு செங்கமலத்தாயாரை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்