ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா

ிருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-07-13 20:40 GMT

திருவையாறு:

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆடிப்பூர விழா

திருவையாறில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப்பூர விழா 11 நாட்கள் நடைபெறும்.அதன்படி இந்த ஆண்டு விழா தர்ம சம்வர்த்தினி சன்னதியில் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்னதாக கொடி கம்பத்துக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டம்

விழா நாட்களில் தினந்தோறும் சாமி புறப்பாடு நடைபெறும், மாலையில் அம்மன் கோவில் மண்டபத்தில் சொற்பொழிவும், கலைநிகழ்ச்சியும் நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 21-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 22-ந் தேதி(சனிக்கிழமை) கொடி இறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் உத்தரவு பேரில் திருவையாறு ஐயாறப்பர் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்