சிறுவந்தாடுஅங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை விழா
சிறுவந்தாடு அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை விழா நடைபெற்றது.
வளவனூர்,
வளவனூர் அருகே சிறுவந்தாட்டில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு அங்காளம்மன், ஆனந்தாயி அம்மன் , பூங்காவனம் அம்மன் ஒன்றாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். ஆடி அமாவாசையான நேற்று, காலை 9 மணிக்கு 3 அம்மன்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அங்காளம்மன், ஆனந்தாயி அம்மன், பூங்காவனம் அம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில், அர்த்த மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.