திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் திசையன்விளை- உவரி புறவழிச்சாலையில் உள்ள மதுபான கடை அருகில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அரசு மதுபான கடையில் மதுபாட்டில்களை வாங்கி அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த குலசேகரப்பட்டினம் அண்ணாசாலையை சேர்ந்த அஜய் (வயது 22) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 43 மதுபாட்டில்களையும் ரூ.400-ஐயும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் திசையன்விளை அருகே உள்ள தலைவன்விளையில் தங்கி இருந்து மதுவிற்பனை செய்தது தெரியவந்தது.